
Yogasalai Prayer கடவுள் வணக்கம்
Invocation
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே
aiNthu karaththanai yAnai mukaththanai
iNthin iLam piRai pOlum eyiRRanai
NaNthi makan thanai nYanak kOzhuNthinaip
puNthiyil vaiththadi pORRu kinREnE
Spiritual Symbolism and Meaning
“ஐந்து கரத்தனை” – The One with Five Hands
The five hands symbolize the five vital energies (Pancha Pranas) — Prana, Apana, Vyana, Udana, and Samana — which sustain life and consciousness. They also represent the five great elements (Pancha Bhutas) — Earth, Water, Fire, Air, and Space. Recognizing and harmonizing with these forces brings the practitioner into alignment with both the body and the cosmos.
“யானை முகத்தனை” – The One with the Elephant Face
The elephant face is rich with symbolic meaning:
· The long trunk symbolizes the breath (prana) — subtle, powerful, and ever-present.
· It also signifies intelligence, memory, and discriminative wisdom — qualities that guide us through obstacles.
· Additionally, the elephant is a revered symbol in Tamil Siddha tradition, where it represents the union of inner power and spiritual insight, often embodied in the form of Vinayagar (Ganesha) as a guardian of deeper yogic knowledge.
“இளம் பிறை போலும் எயிற்றனை” – The Tusk Like a Young Crescent Moon
The crescent moon-shaped tusk symbolizes the mind (Chandra) — delicate, ever-shifting, and illuminated by inner awareness. Its presence reminds us of the need to refine and master the mind, making it a vessel for clarity and peace.
“நந்தி மகன்” – Son of Nandhi
Identifying Ganesha as the “son of Nandhi” speaks to an inner symbolism. Nandhi, the sacred bull, embodies patience, purity, focus, and alert awareness — qualities of Sattva Guna (the pure, balanced state of mind). These virtues are essential for progressing on the yogic path.
“ஞானக் கொழுந்து” – The Bud of Wisdom
When prana flows freely, the elements are in harmony, the breath is mindful, and the mind is sattvic, wisdom naturally blossoms — like a sacred bud nurtured by the universe.
“புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே” – I Place Your Feet in My Mind and Revere You
This is a gesture of inner surrender and devotion. By placing the divine at the center of our awareness, we commit to a life of mindful reverence — remembering these truths not just in thought, but in every breath and action.
May I always remember that within me live the five pranas and five elements.
May my breath, like the elephant’s trunk, guide me toward subtle awareness.
May my mind shine with the calm light of the moon.
May I embody patience and presence, like Nandhi, and awaken the sattvic path.
May the wisdom within me blossom, nurtured by breath, awareness, and surrender.
I pray to the universe: keep these truths alive in me, and let me revere them always
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
theLivu kuruvin thirumEni kAnNdal
theLivu kuruvin thiruNAmanY cheppal
theLivu kuruvin thiruvArththai kEddal
theLivu kuruvuru chiNthiththal thane
1. தெளிவு குருவின் திருமேனி காண்டல்
theLivu kuruvin thirumEni kANdal
→ True clarity is seeing the Guru’s sacred form.
2. தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
theLivu kuruvin thiruNAman cheppal
→ True clarity is chanting the Guru’s sacred name.
3. தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
theLivu kuruvin thiruvAArththai kEddal
→ True clarity is listening to the Guru’s sacred words.
4. தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
theLivu kuruvuru chiNthiththal thAnE
→ True clarity is meditating upon the Guru’s divine form.
Spiritual Symbolism and Meaning
This verse outlines the progressive stages of devotion and realization through the Guru-tattva (the essence of the Guru):
1. Seeing the Guru’s Form (திருமேனி காண்டல்)
The physical presence of the Guru is the first gateway to spiritual awakening. With reverence and humility, simply beholding the Guru plants the seed of transformation.
2. Chanting the Guru’s Name (திருநாமம் செப்பல்)
Repeating the Guru’s name purifies the mind and anchors the heart. It creates resonance with the Guru’s vibration and guidance.
3. Listening to the Guru’s Teachings (திருவார்த்தை கேட்டல்)
True listening (shravana) is a sacred act. The Guru’s words carry power — not just knowledge, but energy that awakens the dormant spirit within.
4. Meditating on the Guru’s Form (குருவுரு சிந்தித்தல்)
Ultimately, the disciple internalizes the Guru — visualizing, meditating, and merging consciousness with the Guru’s essence. This is the culmination of the path, where clarity (தெளிவு) becomes realization.
Clarity arises not from intellectual effort alone, but from heartfelt devotion to the Guru:
Seeing, chanting, listening, and meditating — these are the four lights that dispel inner darkness.
This verse symbolically guides us to refine our vision, purify our speech, attune our ears to true wisdom, and elevate our thoughts. Though the Guru appears outside, the highest Guru is the inner mind—clear, still, and awakened
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே
onRavan thAnE iranNdavan innaruL
NinRanan mUnRinuL NankunNarNthAn aiNthu
venRanan ARu viriNthanan Ezhumparch
chenRanan thAn iruNthAn unNarNthu eddE
Spiritual Interpretation in Yogic & Siddha Philosophy
1. One (ஒன்று – Onru)
→ Symbolizes the Absolute Reality (Brahman or Shiva), the source from which all manifests — the state of pure non-dual consciousness.
2. Two (இரண்டு – Irantu)
→ Represents the first division — subject and object, Purusha and Prakriti, Shiva and Shakti — the graceful unfolding of duality from the One.
3. Three (மூன்று – Mūnru)
→ Denotes the three gunas (Sattva, Rajas, Tamas), or the triputi (knower, known, knowing). The seeker must find steadiness amid this dynamic field.
4. Four (நான்கு – Nāngu)
→ Relates to the mind (manas) in its fourfold function:
o Manas (processing),
o Buddhi (intellect/discernment),
o Chitta (memory/storehouse),
o Ahamkara (ego/self-sense).
Clarity in these aspects leads to mastery over the mental field.
5. Five (ஐந்து – Ainthu)
→ Symbolizes the five senses, the five elements (pancha bhūtas), and the five vital airs (pancha prānas).
The yogi, through discipline, harmonizes these, withdrawing from dispersion and turning inward.
6. Six (ஆறு – Āru)
→ Stands for the six chakras (from Muladhara to Ajna) that govern the flow of energy and awareness in the subtle body.
By awakening and rising through them, the yogi purifies the inner path (sushumna).
7. Seven (ஏழு – Ezhu)
→ Refers to the seventh limb of Ashtanga Yoga: Dhyana (meditation).
This is the state where the yogi becomes deeply absorbed in awareness, with stillness and one-pointedness (ekagrata).
8. Eight (எட்டு – Ettu)
→ Symbolizes Samadhi, the eighth and final stage of Ashtanga Yoga — the state of full absorption, unity with the Absolute, and the dissolution of individual identity.
This is where manifestation returns to source, where all duality collapses into singularity — laya (reabsorption).
Philosophical Essence: Manifestation to Reabsorption
This sequence reflects the cosmic process of manifestation (srishti) and the yogic path of return (laya or pratyahara → samadhi):
· From the One, duality arises.
· Duality births multiplicity — mind, senses, energy, and matter.
· Through yoga and inner discipline, the seeker ascends:
conquering the senses, awakening the chakras, entering meditation,
and ultimately dissolving back into the One.
Closing Prayer – Gratitude and Blessing
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
ulakelAm unNarNthu OthRku ariyavan
Nilavu ulAviya NIrmali vEnNiyan
alakil chOthiyan ampalaththu AduvAn
malar chilampadi vAzhththi vanNanGkuvAm
He, who is rare to comprehend even by those with highest awareness
Whose hair is adorned with moonlight and flowing water
The limitless radiant One who dances in the Hall of Consciousness
Let us praise and bow to His flower-decked, anklet-clad feet
This verse is a salutation to Lord Nataraja — the cosmic dancer, the supreme consciousness, and embodiment of divine energy and wisdom. He is:
- The Incomprehensible Absolute — beyond intellectual grasp, yet realized through inner awakening.
- Adorned by the crescent moon (symbol of the mind) and Ganga (symbol of divine grace and purification), signifying his control over both time and flow.
- The infinite light (chothi) dancing in the Chidambaram (symbol of pure awareness), reminding us that the entire cosmos is a play of consciousness.
- We bow to his flower-laden, anklet-adorned feet, symbolizing humility, surrender, and joy in the divine rhythm.
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்
vAnmukil vazhAthu peyka malivaLam churakka mannan
kOnmuRai arasu seyka kuRaivilA thuyirkaL vAzhka
NAn maRai aranGka lOnGka NaRRavam vELvi Malka
mEnmaikoL chaiva NIthi viLanGkuka vulaka mellAm
This verse is a prayer for:
· Divine grace and natural prosperity, symbolized by the life-giving rain from the clouds (vān mukil).
· A just ruler (kōn muṟai yarasu) who governs with righteousness, ensuring all living beings (thuyirkaḷ) flourish without scarcity.
· The seeker’s awakening to concealed spiritual wisdom (maṟai yaṟaṅka), accompanied by performing right and virtuous actions (naṟṟavam vēḷvi).
· The world-wide spreading of Shaiva dharma and justice (caiva nīti), bringing peace, honor, and spiritual light to all.
கடவுள் வணக்கம்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
aiNthu karaththanai yAnai mukaththanai
iNthin iLam piRai pOlum eyiRRanai
NaNthi makan thanai nYanak kOzhuNthinaip
puNthiyil vaiththadi pORRu kinREnE
கருத்து;
ஐந்து கரத்தனை;
எமது உயிர் வாழ்க்கையானது ஐந்து பிராணன்களான; பிராணன், அபானன், வியானன், உதனன், சமானன் போன்ற வாயுக்களும், ஐம்பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று,ஆகாயம் இவற்றுடன் இணைந்த செயல்பாடாக இருந்து கொண்டிருக்கின்றது . இணைந்த செயல்பாடுகள் ஆனது யோகப் பயிற்சியாளர்களின் உடல் இயக்கத்தை சீர் அமைக்கின்றது. விநாயகருடைய ஐந்து கைகளும் இச்செயல் பாட்டின் குறியீடாக விளங்குகின்றது.
யானை முகத்தனை;
நுட்பமான சக்தியாக எமது உடலில் எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கும் பிராண சக்தியினை நீண்ட தும்பிக்கையின் சிறந்த குறியீடாக குறிப்பிடலாம்.
முக்கியமாக புத்தி கூர்மை, ஞாபக சக்தி, பகுத்தறிவு இவற்றின் இயக்கத்தின் செயல்பாடாக உள்ளது. தமிழ் சித்த முறைப்படி யோகியரின்உள்ளம் சார்ந்த சக்தி நிலை, ஆன்மீகம் சார்ந்த உள்ளுணர்வு இவற்றினைவளர்க்கும் ஆழமான சக்தியாக விநாயகரது உருவத்தை குறிப்பிடலாம்.
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை;
சந்திரனின் இளம்பிறை வடிவமானது மனதைப் பற்றி குறிப்பிடுகின்றது. மனமானது மென்மையானதும், எப்பொழுதும் மாறக் கூடியதும், உள் விழிப்புணர்வுகளினால் ஒளிவிடும் தன்மையானது ஆகும். நினைவுகள் செம்மை படும் பொழுது அமைதியும் தெளிவு நிலையும் ஏற்படுகின்றது.
நந்தி மகன்தனை;
விநாயகர் நந்தியின் மகனாக குறிப்பிடப்படுகின்றார். புனிதமான காளை ஆனது அமைதியான குணமும், தூய்மையான உண்மைத்தன்மையும், கூர்மையான அவதானிப்பும், விழிப்புணர்வுடன் கூடிய எச்சரிக்கையான நிலையையும் குறிக்கும். இந்தத் தன்மையானது சத்வ(sattva) குணத்தை குறிக்கும் .தூய்மையானதும் எப்பொழுதும் சமநிலையை பேணும் யோக வழிமுறைக்கு இந்த நற்குணங்கள் மிகவும் முக்கியமானது ஆகும்.
ஞானக் கொழுந்தினை; ஞானத்தின் வளர்ச்சி
இயல்பான உடல் மனம் உள்ளத்துடன் சேர்ந்த மூச்சின் செயல்பாடானது சாத்வீக குணத்தை ஏற்படுத்தும் இதனால் இயல்பாக ஞானநிலை ஏற்பட்டு மனதில் புனிதத்தன்மை மலரும்.
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே;
பக்தியுடனும் பணிவுடனும் என் மனதில் உன் திருவடிகளை வைத்து வணங்குகின்றேன் விழிப்புணர்வுடன் கூடிய பக்தியை மனதில் வைத்து உண்மையான நினைவுகளுடன் மட்டுமல்லாது ஒவ்வொரு மூச்சிலும் உண்மை நிலையை பேண வேண்டும்.
ஐந்து பிராணங்களும், ஐந்துபூதங்களும் எமது உயிர் வாழ்க்கையில் இணைந்து செயல்படுகின்றன.
யானையின் தும்பிக்கையை குறிக்கும் எமது மூச்சானது நுட்பமான விழிப்புணர்வுடன் கூடிய செயல்பாடாக இருந்து கொண்டிருக்கின்றது.
எமது புத்தியானது சந்திரனின் வெளிச்சம் போன்று அமைதியாக பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது
நந்தியைப் போன்று விழிப்புணர்வுடன் சாத்வீக பாதையானது எப்பொழுதும் நிரந்தரமாக இருந்து கொண்டிருக்கும்.
எமது மூச்சின்செயல்பாட்டினால் ஏற்படும் விழிப்புணர்வு கீழ்ப்படிதல் போன்ற நிலையில் ஞானம் மலரும் .
பிரபஞ்சத்தை நான் வணங்குகின்றேன்; இந்த உண்மை நிலையானது எனது வாழ்க்கையில் என்றும் இருக்க வேண்டும். எல்லோருக்கும் இந்த நிலை வளர வேண்டும் என வணங்குகின்றேன்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
theLivu kuruvin thirumEni kAnNdal
theLivu kuruvin thiruNAmanY cheppal
theLivu kuruvin thiruvArththai kEddal
theLivu kuruvuru chiNthiththal thane
குருவினது புனிதமான வடிவத்தை பார்க்கும் பொழுது உண்மையான தெளிவு நிலை ஏற்படுகிறது. குருவினது புனிதமான திருநாமத்தை பாடும் பொழுது உண்மையான தெளிவு நிலை ஏற்படுகின்றது குருவினது புனிதமான வார்த்தைகளை கேட்கும் பொழுது உண்மையான தெளிவு நிலை ஏற்படுகின்றது.
குருவினது தெய்வீக வடிவத்தை எண்ணத்தில் கொண்டு தியானம் செய்யும் பொழுது உண்மையான தெளிவு ஏற்படுகின்றது
முதலில் குருவின் உபதேசம் ஆனது எமது மனதில் விழிப்பு நிலையை ஏற்படுத்துகின்றது.
திரும்பத் திரும்ப மந்திரங்களை உச்சாடனம் செய்வதன் மூலம் தெளிவு ஏற்படுகின்றது.
குருவின் உபதேசங்களை விளங்கிக் கொள்வதன் மூலம் தெளிவு ஏற்படுகின்றது
இவற்றால் உண்மை நிலையை உணர்ந்து உள்ளத்தில் உள்ள இருளை அகற்றி தெளிவை ஏற்படுத்த வேண்டும்
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே
onRavan thAnE iranNdavan innaruL
NinRanan mUnRinuL NankunNarNthAn aiNthu
venRanan ARu viriNthanan Ezhumparch
chenRanan thAn iruNthAn unNarNthu eddE
இயற்கையின் படைப்புகளுக்கு காரணமான இறைவன் ஒருவனே
சிவன் சக்தியுடன் சேர்ந்து செயல்படும் நிலை இரண்டு
சத்வ ,ராஜச, தாமச என்னும் முக்குணங்கள்
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு நிலைகளை உணர்ந்தவன்
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து புலன்களாலும் வரும் ஆசைகளை வென்றவன்
மூலாதாரம் , சுவாதிஷ்டானம் ,மணிபூரகம், அனாகதம், விசுத்தி ,ஆக்கினை என்னும் ஆறு சக்கரங்களையும் விரிவடையச் செய்து இயங்க செய்பவன்
சகஸ்ரார தளத்தில் ஏழாவது நிலையான தியான நிலையை அடைந்தவன்
எட்டாவது நிலையான சமாதி நிலையில் அமைதி அடைந்தவன்
(உயிர் ஒன்றாகவும் ஆற்றலுடன் சேர்ந்து செயல்படும் போது இரண்டாகவும் சத்வ, ராஜச, தாமச குணங்களை உடைய நிலையில் மூன்றாகவும் மனம், புத்தி, சிந்தனை, அகங்காரம் போன்ற நிலைகளை உணர்ந்தவன் ஆகவும் ஐம்புலன்களால் வரும் ஆசைகளை அடக்கி உள்ளுணர்வால் சக்கரங்களை விரிவடையச் செய்து தியானம் சமாதி நிலையை அடைந்தவன்.)
யோகப் பயிற்சிகளின் ஊடாக உள் மனதில் சிறந்த ஒழுக்கங்களையும் அமைதியையும் ஏற்படுத்துவதன் மூலம் உயிர்களின் உண்மை நிலையை அறிய முடியும்
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
ulakelAm unNarNthu OthRku ariyavan
Nilavu ulAviya NIrmali vEnNiyan
alakil chOthiyan ampalaththu AduvAn
malar chilampadi vAzhththi vanNanGkuvAm
உலகெல்லாம் வாழும் உயிர்கள் அறிந்து கொள்ள முடியாத உன்னதமான விழிப்புணர்வை உடையவன் தலையில் கங்கையையும் சந்திரனையும் உடையவன் (என்பது மனதில் உள்ள எண்ணங்கள் கங்கை நீர் போல ஊற்றெடுக்கும் தன்மையன என்பது குறியீடாகும்). அளவிட முடியாத ஒளி வடிவம் உடையவர் (மனம்ஆகிய அம்பலத்தில் உணர்வுகளாக ஆடிக் கொண்டிருப்பவன்) (சிதம்பரத்தில் நடனம் ஆடுபவன்) சிலம்புகள் ஒலிக்கும் மலர் போன்ற பாதங்களை வணங்கிப் பணிவோ மாக.( மனதில் பணிவு கீழ்படிதல் போன்ற எண்ணங்கள் மூலம் தெய்வீக ஆற்றலையும் அறிவையும் வளர்ப்போமாக.)
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்
vAnmukil vazhAthu peyka malivaLam churakka mannan
kOnmuRai arasu seyka kuRaivilA thuyirkaL vAzhka
NAn maRai aranGka lOnGka NaRRavam vELvi Malka
mEnmaikoL chaiva NIthi viLanGkuka vulaka mellAm
வானிலிருந்து மழையானது பெய்வது போல தெய்வீகத்தன்மை வளர வேண்டும்
மக்கள் வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று வாழ வேண்டும் நீதிநெறி தவறாத தலைமைத்துவம் இருக்க வேண்டும் எல்லா வளங்களும் பெற்று குறைவில்லாமல் உயிர்கள் வாழ வேண்டும் நான்கு வேதங்களும் ,அறநெறிகளும், வேள்வி முறைகளும் பெருகி வளர வேண்டும். மேன்மையான சைவ நீதி முறைகள் உலகெங்கும் வளர வேண்டும். அதாவது அன்பு, நேர்மை, தெய்வீக நெறி உலகெங்கும் போற்றப்பட வேண்டும்.
